Monday, April 18, 2011

தக்காளி சூப் குழம்பு

பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? இந்த சூப்பும் இப்படித்தான்...குடிப்பதை விடச் சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடச் சுவையானது.


தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
மல்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டுகள்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி




செய்முறை:
  • சற்றே நடுத்தர அளவில் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம், துவரம்பருப்பு, மஞ்சள்பொடி இவற்றுடன் மூன்று கோப்பை தண்ணிரைச் சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
  • தேங்காய், சோம்பு 1/2 தேக்கரண்டி, பொட்டுக்கடலை, மல்லிப்பொடி  - இவற்றை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, மீதமிருக்கும் சோம்பு இவற்றைத் தாளிக்கவும்.
  • குக்கரில் உள்ள கரைசலை வாணலியில் ஊற்றவும்.
  • தேவையான உப்பு சேர்க்கவும்.
  • கொதித்து வரும்போது, அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


குறிப்பு:


தக்காளியில் புளிப்பு போதவில்லையென்றால், கொஞ்சம் புளித்தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

கற்றுக்கொடுத்தது: திருமதி பத்மா, அம்மா
சுவை கூட்டக் குறிப்புகள் கொடுத்தது: திருமதி. புவனா சேகர், தோழி

7 comments:

Chitra said...

Super.... I like it.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சித்ரா...

வாங்க சிநேகிதி...உங்க வலைப்பூ பார்த்தேன்...மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர் சூப் :-)

ஆமினா said...

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

மாய உலகம் said...

ரெசிபி சூப்பர்.....

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி மாய உலகம்..

Post a Comment