தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பற்கள்
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு பிடி
துருவிய தேங்காய் - 3/4 கோப்பை
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - 4 துண்டுகள்
கிராம்பு - 3
சோம்பு - 2 தேக்கரண்டி
கச கசா - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குறிப்பு:
உருளைக்கிழங்கு - 3
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பற்கள்
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு பிடி
துருவிய தேங்காய் - 3/4 கோப்பை
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - 4 துண்டுகள்
கிராம்பு - 3
சோம்பு - 2 தேக்கரண்டி
கச கசா - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேகவைத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் கொத்தமல்லிவிதை, கீறிய பச்சைமிளகாய் வறுத்துக் கொள்ளவும். பின், இதனுடன் தேங்காய், சோம்பு, கச கசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் வெண்ணெய், எண்ணெய் விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
- பின் வெங்காயம், தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- பின் உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடவும்.
- பச்சை வாசம் போகும் வரை கொதித்து அடங்கியதும், தீயைச் சற்றே தணித்துவிட்டுத் தயிரைச் சேர்க்கவும்.
- இரண்டு மூன்று நிமிடங்களுப்பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
குறிப்பு:
- இஞ்சி வேண்டுபவர்கள் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.
- தேங்காய் விழுது அரைக்கும் போது முந்திரிப்பருப்பு ஒன்றிரண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
- அதிகமான பச்சை நின்றம் வேண்டுவோர், கொஞ்சமாகக் கொத்தமல்லித் தழையையும் தேங்காயுடன் அரைத்துக்கொள்ளலாம்.
- தயிருக்குப் பதிலாக 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
11 comments:
//கச கசா - 1/2 தேக்கரண்டி//
இது மட்டும் இங்கே (துபாய் ) கிடைக்காது . கொண்டு வரவும் முடியாது . போடாமல் செய்து பார்க்க வேண்டியதுதான் :-))
இங்கேயும் கிடைக்காது.. (சவூதி)..ஒரு முறை கொண்டுவரக்கூடாது என்று தெரியாமல் கொண்டுவந்துவிட்டேன்...அதில் தப்பிப் பிழைத்தது...ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது உபயோகிக்கிறேன்...இது போடாமல் செய்தாலும் நல்லாத்தான் இருக்கும்...
தப்பிச்சீங்க ... :-))) மாட்டினால் 12 வருஷம் ஜெயில் . யாராலும் ஒன்னும் செய்ய முடியாது .
ரெசபி அருமை. வாழ்த்துக்கள்.
Simple and great recipe.
You have a nice blog... Following!!!!
Welcome Chithra!
Welcome Ayesha!
அருமையாக இருக்கு.செய்து பார்கணும்,கசகசா பதில் முந்திரி உபயோகித்து செய்து பார்க்கிறேன்..
வித்தியாசமான ரெசிபி.
நமக்கும் முந்திரிதான் கிடைக்கும் :)
டேஸ்ட்டி குழம்பு.. கசகசா போடலைன்னாலும் பெரிய வித்தியாசம் இருக்காது, இல்லையா?..
மன்னிக்கவும் சாரல்...உங்கள் மறுமொழி இப்போதுதான் பார்த்தேன்....கச கசா போடவில்லையென்றாலும் அவ்வளவாகத் தெரியாது...இருந்தாலும் ஒரு வித மணம் இல்லாமல் போகும்...
Post a Comment