Thursday, April 21, 2011

சேனைக்கிழங்கு மசாலா வறுவல்


தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 200 கிராம் (சுமார் 25 துண்டுகள்)
கடலைப்பருப்பு - 1/2 கோப்பை
கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 150 மிலி.
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கிழங்குடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
  • கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய்வற்றல் சோம்பு இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் ஒன்றிரண்டாகப் பொடி செய்யவும்.
  • பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக, மசாலா வடைப் பக்குவத்துக்கு அரைக்கவும்.
  • இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் நன்கு கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
  • பின் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலாவுடன் பிசறிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும்.

     
குறிப்பு:


சேனைக்கிழங்கு என்று தென் மாவட்டங்களில் அறியப்படும் இக்கிழங்கு, சில இடங்களில் கருணைக்கிழங்கு என்றும் கூறப்படுவதுண்டு.

கற்றுக் கொடுத்தது: திருமதி ப்ரியா ரமேஷ், தோழி

6 comments:

Chitra said...

yummy snack!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொரிச்சு எடுக்கிறதா.. ரொம்பவே அழகா இருக்கு பாக்கவே.. :)

அன்புடன் மலிக்கா said...

கருணைகிழங்கு மசாலா வறுவல் அசத்தல் செய்துபார்கிறேன்..

அன்புடன் மலிக்கா said...

அசத்தல்.

Thenammai Lakshmanan said...

ரொம்ப சூப்பர்..:)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சித்ரா, முத்துலட்சுமி, தேனம்மை, மலிக்கா...

Post a Comment