Tuesday, May 1, 2012

பாசிப்பருப்பு சாம்பார் (இட்லிக்கானது)

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பொடிக்க:

வற்றல் மிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், வற்றல் மிளகாய் - 1, பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:
  • பாசிப்பருப்பை, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • பொடிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் பாசிப்பருப்பு, தண்ணீர், பொடித்த பொருட்கள் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.  

குறிப்பு:

இட்லிக்கான சாம்பார்.....சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்...ஆனால் இட்லிக்கு மட்டுமே தனி ருசி...

கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

15 comments:

துளசி கோபால் said...

சாம்பார் இங்கே.இட்லி எங்கே? :-))))))

பால கணேஷ் said...

வித்தியாசமான விஷயமாயிருக்கும் போலருக்கே... இந்த சாம்பாரை செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பாத்துடறேன்... (நம்மால முடிஞ்சது அதேங்)

கோமதி அரசு said...

பாசமலர், பாசிபருப்பு சம்பார் செய்வேன் ஆனால் நீங்கள் சொல்லும் சாமான்கள் வறுத்து போட்டு செய்தது இல்லை இப்படி செய்து பார்க்கிறேன்
நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க துளசி மேடம்...இட்லிக்கான சாம்பார் என்று குறிப்பிடாமல் விட்டு விட்டேன்...இப்போது சரிசெய்து விட்டேன்.

பாச மலர் / Paasa Malar said...

அவசியம் சாப்பிட்டுப் பாருங்க கணேஷ்...நல்லாருக்கும்...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோமதி மேடம்..வறுத்துப் போடும் போது மணமே தனிதான்...

Asiya Omar said...

சாம்பார் சூப்பர்.உங்க முறை வித்தியாசமாய் இருக்கு.மினி இட்லிக்கு சூப்பராக இருக்கும்.

Radha rani said...

சாம்பார் சூப்பர்! இட்லிக்கு மட்டும் இல்ல இந்த சாம்பார் வெண்பொங்கலுக்கும் பொருத்தமாக இருக்கும்.

பால கணேஷ் said...

உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஆசியா..ஆமாம் மினி இட்லிக்கு மிக நன்றாக இருக்கும்.

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம்..வெண்பொங்கல் தேங்காய்சட்னி கூட இதை வைத்துச் சாப்பிட்டால் ருசிதான்..நன்றி ராதாராணி

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி கணேஷ்..வலைச்சரத்தில் அசத்துறீங்க...

enrenrum16 said...

சிம்பிளா இருக்கு... செய்து பார்க்கிறேன் பாசமலர். நன்றி.

Anonymous said...

super samayalpa

Anonymous said...

super samayalpa

Post a Comment