Sunday, April 15, 2012

கார எண்ணெய் அவரைக்காய்ப் பொரியல்

சைவ விருந்தினர்களுக்கென்று சிறப்பான சமையல் குறிப்புகளுள் இதுவும் ஒன்று.

செய்து பார்த்த பின் தோன்றியது: அவரைக்காயைக்  இப்படிக் காரமாய்ச் செய்ய முடியுமா?

தேவையான பொருட்கள்:

அவரைக்காய்  -200 கிராம்
சின்ன வெங்காயம் - சுமார் 15
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
மல்லிப்பொடி - 2 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
தாளிக்க - கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
  • வாணலியில் தாளிக்கும் அளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் சிறு துண்டாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • பின் மீதமிருக்கும் எண்ணெயை வாணலியில் சேர்த்துச் சற்றுச் சூடாக்கவும்.
  • நன்கு வதங்கியதும், மிகவும் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  • மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடவும்.
  • அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அவரைக்காய் நன்கு வெந்ததும், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறவும்.
  • அவரைக்காய் சுருள வரும்வரை வதக்கவும்.

    கற்றுக் கொடுத்தது: திருமதி மாணிக்கவல்லி அழகப்பன், தோழி

    2 comments:

    வல்லிசிம்ஹன் said...

    பார்க்கும்போதே நாக்கில் நீர் சுரக்கிறது. நன்றி மலர். செய்துவிட்டுச் சொல்கிறேன்.

    கோமதி அரசு said...

    செட்டி நாட்டு சமையல் என நினைக்கிறேன் அவர்கள் சமையலில் நல்ல காரமும் மணமும் இருக்கும் . உங்கள் தோழிக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள். செய்துப் பார்க்கிறேன்.

    Post a Comment