Tuesday, February 21, 2012

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
நீர்த்த புளிக்கரைசல் - 1/2 கோப்பை
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி

பொடிக்க:

மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:

  • தக்காளியைச் சுடுதண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், வெந்தயம் வறுத்துக் கொள்ளவும்.
  • பின் அவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
  • அதனுடன் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து 2 சுற்று சுற்றவும்.
  • பின் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, வேகவைத்த துவரம்பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
  • பின் தக்காளிக் கரைசலை வாணலியில் ஊற்றிக் கொதிக்க விடவும்.

  • நன்கு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, பாத்திரத்தில் எடுத்து ஊற்றவும்.
  • அதிகம் கொதிக்க விடக்கூடாது; நன்கு நுரைத்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு:
  • புளியே சேர்க்காமல் இன்னும் 2 தக்காளி அதிகமாய்ச் சேர்த்தும் செய்யலாம்.
கற்றுக் கொண்டது:  அங்கே இங்கே கேட்டது

7 comments:

சாந்தி மாரியப்பன் said...

பேஷ்.. பேஷ். ரொம்ப நன்னாருக்கு..

cheena (சீனா) said...

தக்காளி ரசம் சாதரணமா வைக்கறது தானே - பலே பலே - ஆமா படத்தப் பாக்கும் போது சாப்பிட்ட திருப்தி வருது

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலர் வெகு ருசி இந்த ரசம்.
இதோடு சின்ன வெங்காயமும் சிறிது வறுத்துப் போடலாம். இன்னும் வாசனை கூடும்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல்...

பாச மலர் / Paasa Malar said...

சீனா சார்...வாங்க வாங்க...அன்றாடம் நாம் செய்கிற உணவுவகைகளும் தொகுத்திருக்கிறேன்..சமையல் அதிகம் தெரியாத தோழிகளின் வேண்டுகோளுக்கிணங்க...மேலும் சமைக்கத் தொடங்கிய காலத்தில் செய்யத்தெரியாமல் நான் கஷ்டப்பட்டது போல், பிற்காலத்தில் என் மகளும் இன்னும் என்னைப் போன்ற பலரும் பயனடையட்டு என்பதும் ஒர் காரணம்

பாச மலர் / Paasa Malar said...

நல்ல குறிப்பு வல்லிமா....அடுத்தமுறை வெங்காயம் சேர்த்துச் செய்கிறேன்..

Unknown said...

"அடுத்தமுறை வெங்காயம் சேர்த்துச் செய்கிறேன்.." வெங்காயமா? வெந்தையமா? வெங்காயம் எதற்கு?

Post a Comment