Sunday, February 12, 2012

வறுத்த மிளகுக் கத்தரிக்காய்

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - நடுத்தர அளவு - 6
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பற்கள்
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • மிளகு, கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் -  இவை அனைத்தையும் பொடிக்கவும்.

  • பின் நிறு துண்டுகளாக நறுக்கியவெங்காயம், துருவிய தேங்காய் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  • ஒவ்வொரு கத்தரிக்கயையும் ஆறு துன்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கத்தரிக்காய், மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

  • சற்றே வதங்கியதும் அரைத்த விழுதுடன் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றிக் கிளறவும்.
  • வாணலியை மூடி வைக்க வேண்டாம்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.
  • கலவை சற்றே இறுகியதும், கவனமாகக் கிளறவும்.
  • கத்தரிக்காய் குழைந்துவிடக்கூடாது.


  • நன்கு ஈரப்பதம் முழுவதும் வற்றியதும், வாணலியை இறக்கவும்.

கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

8 comments:

Asiya Omar said...

அருமையான பகிர்வு.
உங்களுக்கு அன்புடன் இரண்டு விருதுகள் வழங்கியுள்ளேன்.பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2012/02/blog-post_16.html

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி ஆசியா...

துளசி கோபால் said...

நாலு கத்தரிக்காய் கிடக்கே என்ன செய்யலாமுன்னு இருந்தேன். நாளைக்கு இதுதான்.

அம்மா சொன்னது நல்லாத்தான் இருக்கணும்.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க துளசி மேடம்....செஞ்சீங்களா? உங்களுக்குப் பிடிச்சுதா?

துளசி கோபால் said...

செஞ்சேன்ப்பா, சின்ன மாறுதல்களுடன்.

சின்ன வெங்காயம் இல்லைன்னு அரை பெரிய வெங்காயம். கொத்தமல்லி, காஞ்ச மிளகாய் அரைக்காம மிளகாய் மல்லிப்பொடி. சோம்பு சேர்த்துக்கலை.

சாதத்துலே போட்டு பிசைஞ்சு சாப்பிட்டேன். நல்லாதான் இருந்துச்சு.

அம்மாவுக்கு நன்றி சொன்னேன்னு சொல்லுங்க.

பாச மலர் / Paasa Malar said...

//சாதத்துலே போட்டு பிசைஞ்சு சாப்பிட்டேன். நல்லாதான் இருந்துச்சு.//



இந்தக் குறிப்புகளில் சின்ன மாறுதல்கள் செய்தால் கத்தரிக்காய் சாதம் செய்யலாம்..

சாந்தி மாரியப்பன் said...

ருசியாத்தான் இருக்கும். அம்மா கைப் பக்குவமாச்சே. ரொம்பவும் சுண்ட விடாம க்ரேவியாவும் செஞ்சுக்கலாம் போலிருக்கே.

பாச மலர் / Paasa Malar said...

கிரேவியும் நல்லாருக்கும் சாரல்....

Post a Comment