Sunday, February 5, 2012

கொள்ளுக்கஞ்சி


தேவையான பொருட்கள்: 

(2 கோப்பைக்கான அளவு)

கொள்ளு - 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு / பயத்தம்பருப்பு - 3/4 மேசைக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்
தேங்காய்த்துறுவல் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


கொள்ளு



வறுத்த கொள்ளூ + பாசிப்பருப்பு




  • கொள்ளு, மற்றும் பயத்தம் பருப்பைத் தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் அரைகுறையாகப் பொடி செய்யவும்.




  • பிரஷர் குக்கரில் பொடித்த கொள்ளு + பாசிப்பருப்புடன் 3 கோப்பை தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் வைக்கவும்.
  • கஞ்சி தயாரனதும், தேங்காய்த்துறுவலைச் சேர்த்துக் கொள்ளவும்.



குறிப்பு:


  • மேலும் சுவைகூட்டப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத்  தேவையான போது கஞ்சி  வைத்துக்கொள்ளலாம்.

அங்கே இங்கே கேட்ட குறிப்புகளை வைத்து நான் முயற்சித்தது



5 comments:

சாந்தி மாரியப்பன் said...

உடம்புக்கு நல்லதொரு ஆரோக்கியமான உணவு. பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கொள்ளு உடம்பு இளைக்கவைக்குமே. பயத்தம்பருப்பு வயிற்றுக்கு நல்லது.
நல்ல சமையல் குறிப்பு மலர். ரொம்ப நன்றிப்பா.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல்...


நான் குறிப்பிட விட்டுப்போன கூடுதல் கருத்துகளுக்கு நன்றி வல்லிமா...

G.AruljothiKarikalan said...

மிகவும் நல்ல குறிப்பு... உடல் இளைக்க நல்லதொரு குறிப்பு....

பாச மலர் / Paasa Malar said...

நன்றி அருள்ஜோதி....

Post a Comment