தேவையான பொருட்கள்:
வெள்ளை மிளகாய் - 150 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கோப்பை
சமையல் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குறிப்பு:
வெள்ளை மிளகாய் - 150 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கோப்பை
சமையல் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வாணலியைக் காய வைத்து வெந்தயம் வறுத்தெடுக்கவும். பின் அதைப் பொடி செய்து வைக்கவும்.
- வாணலியில் சமையல் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளிக்கவும்.
- காம்புகள் கிள்ளிய வெள்ளை மிளகாயைச் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- மிளகாய்த்துண்டுகளை எண்ணெயில் போட்டுச் சிறு தீயில் வதக்கவும்.
- சுருள வதங்கியதும், கெட்டியான புளிக்கரைசலைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
- உப்பு, மஞ்சள் பொடி, பொடித்த வெந்தயம் சேர்த்துக் கிளறவும்.
- பச்சை வாசம் போனதும், நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
- வெல்லத்தின் சுவை புளியுடன் ரசிப்பவர்கள் சிறிதுவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
- செய்தவுடன் இருப்பதைவிட, ஊற ஊறச் சுவை அதிகமாகும்.
- வெள்ளை மிளகாய்க்குப் பதிலாக, பச்சை மிளகாயும் உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment