தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 200 கிராம்
வெண்ணெய்- 1 தேக்கரண்டி
சீனி - 1/4 கோப்பை
தேங்காய்ப்பால்(கெட்டியானது) - 1/4 கோப்பை
உப்பு - 1/4 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 250 மிலி.
பற்கள் அகலமான சீப்பு(புதியது)
அல்லது முட்கரண்டி (fork) - 1
செய்முறை:
- மைதா மாவுடன் உப்பு, சீனி, வெண்ணெய், தேங்காய்ப்பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசையவும்.
- சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3 மணி நேரம் போனதும், மாவு சற்று மென்மையாக இருக்கும்.
- சிறிய சிறிய உருண்டைகளாக (சிறிய கோலிக்குண்டு அளவில்) உருட்டிக் கொள்ளவும்.
- சீப்பு, அல்லது முட்கரண்டியின் பின் இந்த உருண்டையை வைத்து மெதுவாக ஒரு பக்கமாக அழுத்தி இழுக்கவும்.
- பின் அதைக் கையில் எடுத்து இடது கை ஆட்காட்டி விரலின் நுனியில் சுருட்டவும்.
- இரண்டு முனைகளையும் சேர்த்து மெதுவாக அழுத்தவும்.
- பின் நடுவில் ஒட்டா வண்ணம் கவனமாக அதை எடுத்துத் தட்டில் வைக்கவும்.
- எல்லா உருண்டைகளையும் சுருளாகச் செய்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் இச்சுருள்களை கொஞ்ச்ம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
- இன்னொரு பாத்திரத்தில் சீனியுடன் 2 - 3 மேசைக்கரண்டி மட்டுமே தண்ணீர் கலந்துஅடுப்பில் வைக்கவும்.
- சீனி கரையும் வரை நன்கு கிளறவும்.
- சீனிப்பாகு நன்கு சூடேறி நிறம் பழுப்பு வெள்ளையாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
- பொரித்தெடுத்த சுருள்களை அப்பாத்திரத்தில் போட்டு சீனிப்பாகுடன் நன்கு கலக்கவும்.
- சூடாக இருக்கும் பாகு, சுருளைச் சுற்றி எளிதாகப் பற்றிப் பூத்து நிற்கும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா
5 comments:
படங்களுடன் என்ன அருமையான நேர்த்தியான குறிப்பு. சாப்பிடும் ஆசை இப்போதே வருகிறது. தீபாவளி சிறப்புக் குறிப்புக்கு நன்றி மலர்.
வெகு தாமதமாகவே இக்குறிப்பைப் படித்தேன். செய்முறையைத் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.
சூப்பர்.செய்யத்தூண்டும் குறிப்பு.
அவ்வைநாயகன், ஆசியா...
வருகைக்கு நன்றி..தாமதத்துக்கு மன்னிக்கவும்...
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment