Wednesday, April 11, 2012

தேங்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய்- 3/4 கோப்பை
தோல் உளுத்தம்பருப்பு- 4 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவில் முக்கால் பாகம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • வாணலியில் உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
  • பின் மிளகாயும் சேர்த்துச் சிறிது நேரம் வறுத்து இரண்டையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • தேங்காயைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • ஊறவைத்த புளியுடன், உப்பு இவை அனைத்தையும் சேர்த்துக் கரகரப்பாகச் சிறிது தண்ணீரும் சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு:
  • உதிரியாக வேண்டுமென்றால், தண்ணீர்  விடாமல் அரைக்கவும்.
  • தாளிக்கும் வெங்காய வடகம் பச்சையாக வறுக்காமல் கடைசியில் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றியும் இத்துவையல் அரைப்பதுண்டு.
  • அம்மியில் அரைத்தால் ருசியே தனிதான்..

    கற்றுக் கொடுத்தது: திருமதி பத்மா, அம்மா

7 comments:

ஸாதிகா said...

தோல் உளுத்தம் பருப்பு போட்டு துவையல்..அவசியம் செய்து பார்க்கவேண்டும்>

கோமதி அரசு said...

இந்த துவையலை தண்ணீர் விடாமல் அரைத்து ஊர் பயணங்களுக்கு எடுத்து செல்வோம்.(புளியை வறுத்து அரைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.)

பச்சைமிளகாய் வைத்து அரைத்து தை பொங்கல் அன்று பொங்கல் சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

தேங்காய் துவையல் கற்றுக் கொடுத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

உளுந்து துவையல் செய்து இருக்கேன்
தோல் உளுந்தில் சுண்டல், இட்லி தான் செய்ததுண்டு
துவையல் சிறிது வித்தியாசம் தான் செய்து பார்க்கனும்

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஸாதிகா...எந்தத் துவையலுக்கும் தோல் உளுந்து சேர்த்து அரைத்தால் வாசமாக இருக்கும்...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோமதி மேடம்...புளி வறுத்து அரைப்பது நல்லதொரு குறிப்பு...ஆமாம்..வெள்ளைப் பொங்கல் பொங்குவார்கள் பொங்கலன்று...
அதனுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டதுண்டு...பச்சை மிளகாய் வைத்தால் இன்னும் வாசம் நன்றாக இருக்குமே...

பாச மலர் / Paasa Malar said...

செய்து பாருங்கள் ஜலீலா...சாம்பார் சாதம் புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதம் மற்றும் எண்ணெய்க் கட்டி உருண்டை சாதம் என்பார்களே - இவற்றுடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

Asiya Omar said...

தேங்காய் துவையல் தோள் உளுந்து சேர்த்து செய்வது இப்ப தான் பார்க்கிறேன்.அருமை.

Post a Comment