Tuesday, March 13, 2012

காலி ஃப்ளவர் முட்டைப் பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

காலி ஃப்ளவர் சிறியது - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
முட்டை - 2
மிளகுப்பொடி - 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
  • காலி ஃப்ளவரைப் பொடிப் பொடியாக நறுக்கி, உப்பிட்ட வெந்நீரில் சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பொன்னிறமானதும், நீர் வடிகட்டிய காலி ஃப்ளவர், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • நன்றாகச் சுருண்டு வரும் போது, முட்டைகளை உடைத்து ஊற்றி, அவ்வப்போது கிளறி விடவும்.
  • முட்டை வெந்ததும், மிளகுப் பொடியைத் தூவி இறக்கவும்.

குறிப்பு:
  • ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டி சான்ட்விச் - இவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும்.
  • எண்ணெய் சற்று அதிகம் பயன்படுத்தினால், சுவையும் அதிகமாகும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா ராம், தோழி

4 comments:

Asiya Omar said...

பார்க்கவே நன்கு வதங்கி சூப்பராக இருக்கு.நான் கொஞ்சம் மாறுதலோடு செய்வேன்.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஆசியா...உதிரியாக வருவதுதானே பொடிமாஸ்..அதற்காக அதிக நேரம் வறுக்க வேண்டியிருந்தது..ஒரே வகையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் செய்கிறோம்தானே...இதுதான் சமையலின் தனிச்சிறப்பு..

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.

Post a Comment