Sunday, March 11, 2012

தக்காளிப் பருப்புப் பச்சடி

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பற்கள்
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
தாளிக்க - கடுகு,உளுந்து, எண்ணெய், கறிவேப்பிலை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  • சுருண்டு வதங்கியபின், வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.
  • மிளகாய்ப்பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைக்கவும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து, விழுதாக அரைத்த தேங்காய் சீரகத்தைச் சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


குறிப்பு:

  • சாதத்தில் பிசைந்து சாப்பிட, சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிட என்று அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.
  • தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

4 comments:

Asiya Omar said...

அருமையாக இருக்கு.இந்தப் பச்சடி செய்து நாளாச்சு.

Radha rani said...

பச்சடி நல்லா இருக்கு.அருமை.!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஆசியா...

வாங்க ராதா ராணி..மிக்க நன்றி..

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு.

Post a Comment