Wednesday, January 11, 2012

வெந்தயக்களி

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 கோப்பை
உளுத்தம்பருப்பு - 1/4 கோப்பை
வெந்தயம் - 1/4 கோப்பை
கருப்பட்டி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் சுமார் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின் அரவை இயந்திரத்தில் நன்றாக மையாக அரைக்கவும்.

  • Non-stick பாத்திரம் அல்லது கனமான பாத்திரத்தில் மாவுடன் 3 கோப்பை உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து  மிதமான தீயில் கிளறவும்.
  • கட்டிகள் உருவாகா வண்ணம் தொடர்ந்து கிளறுவது அவசியம்.

  • சுமார் 15 நிமிடத்தில் களி தயாராகிவிடும்.

    சாப்பிடும் முறை:
  • சூடான களியைத் தட்டில் வைத்து, நடுவே குழியாக்கவும்.
  • பொடியாகத் தூள் செய்த கருப்பட்டி / பனைவெல்லம் நடுவில் வைத்து நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிடவும்.

  • அவரவர் தேவை / விருப்பத்துக்கேற்ப மேலும் மேலும் கருப்பட்டியும், எண்ணெய்யும் சேர்த்துக் கொள்ளவும்.
  • காரப்பிரியர்கள் இரண்டாவது சுற்று சாப்பிடும் போது தேங்காய்ச் சட்னியுடன் சுவைக்கலாம்.

  • சைவப்பிரியர்கள் மொச்சைக்கொட்டை புளிக்குழம்பும், அசைவப்பிரியர்கள் கருவாட்டு மொச்சைக்குழம்பும் சேர்த்துச் சாப்பிடலாம்.
குறிப்பு:
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வப்போது உடற்சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி மற்றும் இலகுவான சுகப்பிரசவம் இவற்றுக்கு மிகவும் உகந்தது இந்தக்களி.
  •  வாரம் ஒரு முறை வீட்டில் அனைவரும் சாப்பிட்டு வர,  உடற்சூடு தணியும்.
  • சர்க்கரை நோயாளிகள் அரிசியின் அளவைச் சற்றே குறைத்து, வெந்தயத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

மங்கையர் உலகம் ஜனவரி மாதப் போட்டி

http://ithu-mangayarulagam.blogspot.com/2012/01/blog-post.html

5 comments:

Asiya Omar said...

களி என்ற குறிப்புக்களை நம் மக்கள் மறந்து வரும் வேளையில் இந்த பகிர்வு அருமை. பக்குவமாக வந்திருக்கு.

Anonymous said...

உங்களின் இந்த பதிவு நமது மங்கையர் உலகம் வலைப்பூவின் இணைக்கப்பட்டுள்ளது.. வாழ்த்துகளும் நன்றிகளும்

Jaleela Kamal said...

மிக அருமை

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

அருமையான குறிப்பு..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஆசியா, ஜலீலா, சாரல், ரிஷ்வன். மங்கையர் உலகம்..

Post a Comment