Saturday, March 31, 2012

எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 8
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பற்கள்
சீரகம் - 1/2 தேக்கரண்டி#
கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கோப்பை
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் 3/4 கோப்பை
தாளிக்க: கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
எண்ணெய் - 1/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கத்தரிக்காய் நுனிகளை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் மீதமுள்ள எண்ணெய் மொத்தம் சேர்க்கவும்.
  • கத்தரிக்காய்களைச் சேர்த்து, பிரவுன் கலர் நிறம் வரும்வரை வதக்கவும்.
  • புளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கி, வாணலியில் ஊற்றி மூடவும்.
  • தேங்காய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
  • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

11 comments:

வல்லிசிம்ஹன் said...

யம்ம்.யம். தேங்காய் அரைத்துவிடாத குழம்பைத் தான் நான் செய்திருக்கிறேன்.
இதையும் செய்து பார்க்கிறேன். நன்றி மலர்.

Radha rani said...

எண்ணெய் மிதக்கும் சுவையான குழம்பு..நல்லா இருக்கு.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க வல்லிமா....எல்லாவகைப் புளிக்குழம்பும் இரு வகையாகச் செய்யலாம்...தேங்காய் சேர்த்தும், சேர்க்காமலும்...ஆனால் தேங்காய்க்கான ருசியே தனிதான்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ராதாராணி ...சுவையான குழம்புதான்...

Mahi said...

நல்லா இருக்குங்க,எண்ணெய்க்கத்தரிக்காய் குழம்பு!:P

Asiya Omar said...

ஆஹா! சூப்பர்.நானும் செய்து போஸ்ட் செய்ய வைத்திருந்தேன்.உங்கள் முறை சிறிது வித்தியாசம்.பார்க்கவே சூப்பர்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி மஹி....

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஆசியா....போஸ்ட் பண்ணுங்க...

Anonymous said...

உடனே செய்து பார்க்கின்றேன்..நன்றி

கோமதி அரசு said...

எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு மிக நன்றாக இருக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி தூயா, கோமதி மேடம்

Post a Comment