Tuesday, March 20, 2012

மேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன் ஃப்ராங்க்ஸ் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வெந்தயக்கீரை  / மேத்தி(காம்புகள் நீக்கியது) - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 4 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
வெங்காயத்தாள் - அலங்கரிக்க

செய்முறை:
  • சிக்கன ஃப்ராங்க்ஸ்களைச்சிறு துண்டுகளாக வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, சிக்கன்ஃப்ராங்க்ஸ் துண்டுகளைக் கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். வறுத்ததும், நன்றாக உப்பி வரும்.


  • எண்ணெய் தேவைப்பட்டால் இன்னும் சிறிது  ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
  • சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, பொடியாக  நறுக்கிய மல்லித்தழைசேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
  • மசாலா வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
  • ஒரு சின்ன வாணலியில் / தாளிக்கும் கரண்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தயக்கீரையைச் சற்றே முறுகலாக வறுத்தெடுத்து மசாலாவுடன் சேர்க்கவும். பச்சையாகச் சேர்ப்பதைவிட, வறுத்துச் சேர்த்தால் வெந்தயக்கீரை வாசம் நன்றாக இருக்கும்.
  • சிக்கன் ஃப்ராங்க்ஸ் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

குறிப்பு:
  • சாதத்துடன் பிசைந்து சாப்பிட, ரசம் / பருப்பு / சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
  • ஃபிராங்க்ஸ்க்குப் பதிலாக சிக்கன் சாஸேஜும் பயன்படுத்தலாம்.
கற்றுக் கொடுத்தது: சொந்தமா யோசித்து முயற்சித்தது

2 comments:

Radha rani said...

சிக்கன் ஃப்ராங்க்ஸ் சௌதியில கிடைக்கும்..நா எங்க போயி வாங்கரது..குறிப்பு நல்லாத்தான் இருக்கு.நான் செய்து பார்க்க முடியாதே..((

பாச மலர் / Paasa Malar said...

ராதா, ஜில் ஜில் ஜிகிர்தண்டா பழரசம்...எல்லாம் உங்க வீட்ல வந்து குடிச்சுட்டு ஜில்னு இருக்கு...

வருகைக்கு நன்றி..சிக்கன் ஃபிராங்க்ஸ் இல்லேன்னா என்ன.....ஃப்ரெஷ்ஷா வாங்கிச் சாப்பிடுறவங்க நீங்க இல்லையா...உங்களுக்குப் பிடிச்சதா ஏதாவது சீக்கிரம் சமைச்சுட்டாப் போச்சு..

Post a Comment