தேவையான பொருட்கள்:
பச்சரிசி / பாசுமதி அரிசி - 1 கோப்பை
நெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை + புதினா - 1 மேசைக்கரண்டி
பட்டை- 3 துண்டு
கிராம்பு - 3
முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
விரும்பினால்,
பச்சரிசி / பாசுமதி அரிசி - 1 கோப்பை
நெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை + புதினா - 1 மேசைக்கரண்டி
பட்டை- 3 துண்டு
கிராம்பு - 3
முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- அரிசியைக் கழுவி, தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
- வாணலியில் நெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
- நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அரிசியைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- பின் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
- நன்கு கொதி வந்ததும், அடுப்பின் தீயைக் குறைக்கவும்.
- சாதம் முக்கால் வேக்காடு பக்குவத்துக்கு வந்த பின், புதினா கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும்.
- வறுத்த முந்திரி சேர்த்து, சாதம் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு:
- தண்ணீர் அளவைச் சற்றே குறைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஏலக்காய் தட்டிச் சேர்க்கலாம்
3 comments:
இனிய குறிப்பு.... என்னை போன்ற சைவ உணவாளர்களுக்கு ஏற்ற குறிப்பு
ஓ சைவப்பிரியரா நீங்கள்..வருகைக்கு நன்றி அருள்ஜோதி..
பார்க்கவே அருமையாக இருக்கு.
Post a Comment