Sunday, February 26, 2012

பாசிப்பயிறு காரப் பணியாரம்

தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு - 3/4 கோப்பை
புளித்த இட்லி / தோசை மாவு - 1 கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • பாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
  • பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • தாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:

  • மாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.
  • காரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

கற்றுக் கொண்டது:

பெசரட்டு செய்த போது இதைச் செய்தால் என்ன என்று தோன்றியபோது செய்தது.

7 comments:

Asiya Omar said...

நல்ல குறிப்பு.செய்து பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான ஐடியா. நானும் செய்து பார்க்கிறேன்:).

வல்லிசிம்ஹன் said...

நல்ல ஐடியா மலர். செய்து பார்க்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாவேயிருக்கும். வீட்ல பெசரெட் சாப்பிடற குழந்தைகள் அதையே காலேஜ்க்கு கொண்டு போகணும்ன்னா கொஞ்சம் யோசிப்பாங்க..... காய்ஞ்சு போயிருமாம். அவங்க சொல்றதும் சரிதானே. இப்படிச்செஞ்சு கொடுத்து விட்டா சாப்பிடவும் செய்வாங்க.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஆசியா, ராமலக்ஷ்மி, வல்லிமா..

ஆமாம் சாரல்..அதிகம் காய்ந்துவிடாமல் இருக்கும்...

கோமதி அரசு said...

புது மாதிரி பணியாரம் செய்து பார்க்கிறேன் பாசமலர்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றாகவும் இருக்கும் செய்து பாருங்கள் கோமதி மேடம்..

Post a Comment