Saturday, March 31, 2012

எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 8
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பற்கள்
சீரகம் - 1/2 தேக்கரண்டி#
கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கோப்பை
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் 3/4 கோப்பை
தாளிக்க: கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
எண்ணெய் - 1/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கத்தரிக்காய் நுனிகளை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் மீதமுள்ள எண்ணெய் மொத்தம் சேர்க்கவும்.
  • கத்தரிக்காய்களைச் சேர்த்து, பிரவுன் கலர் நிறம் வரும்வரை வதக்கவும்.
  • புளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கி, வாணலியில் ஊற்றி மூடவும்.
  • தேங்காய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
  • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Tuesday, March 20, 2012

மேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன் ஃப்ராங்க்ஸ் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வெந்தயக்கீரை  / மேத்தி(காம்புகள் நீக்கியது) - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 4 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
வெங்காயத்தாள் - அலங்கரிக்க

செய்முறை:
  • சிக்கன ஃப்ராங்க்ஸ்களைச்சிறு துண்டுகளாக வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, சிக்கன்ஃப்ராங்க்ஸ் துண்டுகளைக் கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். வறுத்ததும், நன்றாக உப்பி வரும்.


  • எண்ணெய் தேவைப்பட்டால் இன்னும் சிறிது  ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
  • சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, பொடியாக  நறுக்கிய மல்லித்தழைசேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
  • மசாலா வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
  • ஒரு சின்ன வாணலியில் / தாளிக்கும் கரண்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தயக்கீரையைச் சற்றே முறுகலாக வறுத்தெடுத்து மசாலாவுடன் சேர்க்கவும். பச்சையாகச் சேர்ப்பதைவிட, வறுத்துச் சேர்த்தால் வெந்தயக்கீரை வாசம் நன்றாக இருக்கும்.
  • சிக்கன் ஃப்ராங்க்ஸ் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

குறிப்பு:
  • சாதத்துடன் பிசைந்து சாப்பிட, ரசம் / பருப்பு / சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
  • ஃபிராங்க்ஸ்க்குப் பதிலாக சிக்கன் சாஸேஜும் பயன்படுத்தலாம்.
கற்றுக் கொடுத்தது: சொந்தமா யோசித்து முயற்சித்தது

Tuesday, March 13, 2012

காலி ஃப்ளவர் முட்டைப் பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

காலி ஃப்ளவர் சிறியது - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
முட்டை - 2
மிளகுப்பொடி - 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
  • காலி ஃப்ளவரைப் பொடிப் பொடியாக நறுக்கி, உப்பிட்ட வெந்நீரில் சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பொன்னிறமானதும், நீர் வடிகட்டிய காலி ஃப்ளவர், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • நன்றாகச் சுருண்டு வரும் போது, முட்டைகளை உடைத்து ஊற்றி, அவ்வப்போது கிளறி விடவும்.
  • முட்டை வெந்ததும், மிளகுப் பொடியைத் தூவி இறக்கவும்.

குறிப்பு:
  • ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டி சான்ட்விச் - இவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும்.
  • எண்ணெய் சற்று அதிகம் பயன்படுத்தினால், சுவையும் அதிகமாகும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா ராம், தோழி

Sunday, March 11, 2012

தக்காளிப் பருப்புப் பச்சடி

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பற்கள்
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
தாளிக்க - கடுகு,உளுந்து, எண்ணெய், கறிவேப்பிலை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  • சுருண்டு வதங்கியபின், வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.
  • மிளகாய்ப்பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைக்கவும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து, விழுதாக அரைத்த தேங்காய் சீரகத்தைச் சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


குறிப்பு:

  • சாதத்தில் பிசைந்து சாப்பிட, சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிட என்று அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.
  • தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Saturday, March 3, 2012

நெய் சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி / பாசுமதி அரிசி - 1 கோப்பை
நெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை + புதினா - 1 மேசைக்கரண்டி
பட்டை- 3 துண்டு
கிராம்பு - 3
முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

  • அரிசியைக் கழுவி, தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
  • வாணலியில் நெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் அரிசியைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
  • பின் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • நன்கு கொதி வந்ததும், அடுப்பின் தீயைக் குறைக்கவும்.
  • சாதம் முக்கால் வேக்காடு பக்குவத்துக்கு வந்த பின், புதினா கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும்.
  • வறுத்த முந்திரி சேர்த்து, சாதம் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:

விரும்பினால்,

  • தண்ணீர் அளவைச் சற்றே குறைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஏலக்காய் தட்டிச் சேர்க்கலாம்
கற்றுக் கொடுத்தது: திருமதி ஷோபா மோகன், தோழி