தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 3 சிறிய துண்டு
கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 50 கிராம்
எண்ணெய் - 100 மிலி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை
புடலங்காய் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 3 சிறிய துண்டு
கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 50 கிராம்
எண்ணெய் - 100 மிலி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- புடலங்காயைப் பொடிதாக நறுக்கவும். பொடியாகச் சீவியும் கொள்ளலாம்.
- உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் பிசறி வைகவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- புடலங்காய் சிறிது தண்ணீர் விட்டிருக்கும். நன்றாகப் பிழிந்து விட்டு வாணலியில் சேர்த்து வதக்கவும்.
- இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- வாணலியை மூடி வைக்கவும்.
- தண்ணீர் தெளிக்க வேண்டாம். எண்ணெயிலேயே வேக வேண்டும்.
- வெந்ததும் பொட்டுக்கடலையைப் பொடி செய்து தூவவும்.
கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை
No comments:
Post a Comment