Friday, June 18, 2010

பாகற்காய் வறுவல் - 1

தேவையான பொருட்கள்:

பெரிய பாகற்காய் - 3
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பற்கள்
எண்ணெய் - 6 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு





















செய்முறை:
  • பாகற்காயைச் சற்றே பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (1 பாகற்காயை 3 அல்லது நான்கு துண்டுகளாக்க வேண்டும்.)
  • மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்துப் பிசறி, ஆவியில் அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். (இட்லிச் சட்டியில், அல்லது வாணலியின் தண்ணீர் வைத்து அதனுள் ஓர் உயரமான கிண்ணத்தில்.வைத்து ஆவியில் வேக வைக்கலாம்.)
  • பின் வாணலியில் எண்ணெய் விட்டு, எண்னெய் சூடேறியவுடன் பாகற்காய் துண்டுகள், மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கவும்.
  • பாகற்காய் சற்றே வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாகச் சிவக்கும் வரை வறுக்கவும்.
















குறிப்பு:


சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
மிளகாய்ப்பொடியும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.

கற்றுக் கொடுத்தது: சுனிதா, என் தோழி

7 comments:

கோவி.கண்ணன் said...

ஆவியில் வேக வைக்கும் முறை புதியது செய்து பார்க்கிறேன். நன்றி !

வல்லிசிம்ஹன் said...

வெங்காயத்தை முதலில் வதக்க வேண்டாமா மலர்?
செய்து பார்க்கிறேன் நன்றிப்பா.

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் கோவி. வித்தியாசமாக இருக்கும்....

பாச மலர் / Paasa Malar said...

வல்லிம்மா....பாகற்காய் வதங்க நேரம் அதிகம் பிடிக்கும்.....முதலிலேயே வெங்காயம் போட்டால் கருகி விடும்....அதனால் பாதியில்தான் சேர்க்க வேண்டும்...

ஜெய்லானி said...

நீங்க தேங்காய் துருவி போடமாட்டீங்களா ?..!!

பாச மலர் / Paasa Malar said...

தேங்காய் சேத்ததில்லை..சேத்தா நல்லாத்தான் இருக்கும்...அடுத்த முறை செய்யும் போது செய்து விடுகிறேன்...

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

Post a Comment