தேவையான பொருட்கள்:
தக்காளி - 3 சிறியது / 2 பெரியது (மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும்)
புளிக் கரைசல் - ஒரு சிறிய எலுமிச்சையளவு புளியின் கரைசல்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு, பெரிய பற்கள் - 10 (இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவ
தாளிக்க:
எண்ணெய் (2 அல்லது 3 மேசைக்கரண்டி) கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம், சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை
(தாளிக்கும் வடகமும் பயன்படுத்தலாம்)
செய்முறை:
தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் புளிக்கரைசல், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு- இவை அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானவுடன், கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம் தாளிக்க வேண்டும். பின்
வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் அனைத்து பொருட்களும் கலந்த கரைசலை வாணலியில் இட வேண்டும். பச்சை வாசனை போகின்ற வரையில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும
கற்றுக் கொடுத்தது : தோழி ஷோபா.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மிளகாய் காம்பு கிள்ளாம அப்படியே போடணுமா? அதுக்கு எதாவது காரணம் இருக்கா? எனக்குத் தெரிஞ்ச காரணம் - எடுத்துத் தூக்கிப் போட எளிதா இருக்கும் ;-)
கொஞ்சம் அசைவம் பக்கமும் கருணை காமிங்க
please remove the word verification for the comments
வருது வருது அசைவம்...
மிளகாய் கிள்ளாமல் போட்டால், ஒரு விசேட மணம் வரும் என்று என் தோழி சொல்லக் கேள்வி & அனுபவமும் கூட...காரம் சற்றுக் குறைவாக வேண்டும் என்பவர்களுக்காக..ஆனால் வழக்கத்தைவிடக் கொஞ்சம் நேரம் அதிகமாக வறுக்க வேண்டும்.
ஆகா, நல்ல கவிஞர், நல்ல கட்டுரையாளர், நல்ல பேச்சாளர் என்று மிளிர்கிற உங்கள் பன்முக ஆற்றலில் சமையலும் ஒருமுகமா!
அப்பப்ப இங்க வந்து பார்த்து நானும் சமையலில் இறங்கிவிடப்போகிறேன் :))
தக்காளியே பொதுவா புளிக்கும் , அதுக்கூட புளிய சேர்த்தா அதிகமா புளிக்காதா ? புளியே புளிக்கும் போது தக்காளி புளிக்காதா. உங்களுக்கு ஏதாவது புரிந்ததா ?.எனக்கு புரியல !!!
படம் சூப்பர்.............
ஜெய்லானி
புளிக்கறதுதான் புளிக்குழம்பு...பொதுவா புளிக்குழம்புக்கு உப்யோகப்படுத்துற புளியைவிடக் குறைவாகப் பயன்படுத்திவிட்டு, தக்காளி சேர்க்க வேண்டும்.....உங்களுக்குப் புளிப்பு
பிடிக்காது என்று நினைக்கிறேன்...நான் எழுதியிருக்கும் காரம் நடுத்தரம்தான்...இன்னும் கொஞ்சம் காரம் வேண்டுமானால் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்..
இப்னு...நல்லாச் சமைத்துச் சாப்பிடுங்க..வாய் ருசிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் அதுதான் நல்லது...சமையல் ஆற்றல்லாம் ஒண்ணும் அவ்வளவு பெரிசா இல்லை...
வாய்க்கு ருசியா வேணுமேன்னுதான் பண்ணுவேன்..
Post a Comment