தேவையான பொருட்கள்:
கோழி (நடுத்தர அளவுத் துண்டுகள்) - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லித்தழை - அலங்கரிக்க
எண்ணெய் - 100 மி.லி.
பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 3
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
கொத்தமல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குறிப்புகள்:
தக்காளி வதக்காமல் காயோ, இறைச்சியோ வேகவைக்கும் நேரத்தில் சேர்த்தால், நிறமும் சுவையும் சற்றுக் கூடுதலாக இருக்கும்.
கோழித்தொக்காக இருக்காமல், அடர்த்தியான மசாலாவுடன் வேண்டுவோர் சற்று முன்னதாக இறக்கிவிடலாம்.
கற்றுக் கொடுத்தது: தோழி ஃபெனில்டா
கோழி (நடுத்தர அளவுத் துண்டுகள்) - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லித்தழை - அலங்கரிக்க
எண்ணெய் - 100 மி.லி.
பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 3
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
கொத்தமல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது, 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, 1 தேக்கரண்டி மல்லிப்பொடி இவையனைத்தையும் கோழித்துண்டங்களின் மீது பிசிறி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழித்துண்டங்கள் மூன்று மூன்றாக இட்டு மிதமான தீயில், அரைவேக்காட்டில் பொரித்தெடுக்கவும். அதிகமான நேரம் எண்ணெயில் இருக்கவிட வேண்டாம்.
பின் அதே எண்ணெயில் (எண்ணெய் அதிகம் என்றால் கொஞ்சம் எண்ணெயை எடுத்து விடலாம்) பட்டை, கிராம்பு தாளித்த பின், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வரும்போது, மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். சற்றே வதங்கியவுடன், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்க்கவும். பின் கோழித்துண்டங்களையும் அதில் போடவும். கோழியை வேகவைக்கத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தக்காளியையும் சேர்க்கவும். வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் கிளறி விடவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னதாக கரம் மசாலா தூவி இறக்கவும்.குறிப்புகள்:
தக்காளி வதக்காமல் காயோ, இறைச்சியோ வேகவைக்கும் நேரத்தில் சேர்த்தால், நிறமும் சுவையும் சற்றுக் கூடுதலாக இருக்கும்.
கோழித்தொக்காக இருக்காமல், அடர்த்தியான மசாலாவுடன் வேண்டுவோர் சற்று முன்னதாக இறக்கிவிடலாம்.
கற்றுக் கொடுத்தது: தோழி ஃபெனில்டா
No comments:
Post a Comment