புழுங்கலரிசி - 1 1/2 கோப்பை (200 மி.லி. கோப்பை)
பச்சரிசி - 1 கோப்பை
துவரம்பருப்பு - 3/4 கோப்பை
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
- அரிசி, பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து இட்லி மாவு பக்குவத்திற்கு அரைக்கவும்.
- கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்க்கவும்.
- கெட்டியாக இல்லாமல், மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும். (கோதுமை தோசை பதத்துக்கு)
- தோசைக்கல் நன்றாகச் சூடேறிய பின், கோதுமை தோசை வார்ப்பது போல், கல்லின் விளிம்பிலிருந்து தோசை ஊற்றவும்.
- மேற்பரப்பு நன்றாய்ச் சிவந்தவுடன், அடுத்த பக்கம் திருப்பிப் போடவும்.
குறிப்பு:
நல்ல முறுமுறு தோசை வேண்டுபவர்கள் மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும்.
அடை போன்ற கெட்டியான பக்குவத்தில் வேண்டுபவர்கள், மாவைச் சற்றுக் கெட்டியாகக் கரைக்கவும்.
வேண்டுமானால், 2 மேசைக்கரண்டி தேங்காய்த் துறுவல் சேர்த்துக் கொள்ளலாம்.
மாவை அரைத்தவுடன் சுட்டு விடலாம். புளிக்கவைக்கத் தேவையில்லை.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா
5 comments:
பாக்கும்போதே ஆசையை தூண்டுது. வடை தோசையாச்சா !!! அப்ப இது இட்லிக்கு சரி வருமா ?
நல்ல் மொருகலாக இருக்கிறது, யாரு பத்மா அம்மா?
துவரம்பருப்பு இட்லி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன் ஜெய்லானி.
வாங்க ஜலீலா..
பத்மா...என் அம்மா
ஓ அடை மாதிரியே தோசையா..?
தோசை ஊத்தினதுயாரு சூப்பர் ரோஸ்டா இருக்கே..:)
Post a Comment